ஹரியானா மாநிலம் யமுனாநகரில் இளம்பெண் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், ஃபர்கான் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணுடன் சுமார் இரண்டு ஆண்டுகளாக உறவில் இருந்த ஃபர்கானுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதால் உறவை முறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பெண் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால், தனது திருமணம் நின்றுபோகக் கூடும் என்ற அச்சத்தில் ஃபர்கான் கொலை திட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.

டிசம்பர் 6-ஆம் தேதி அப்பெண்ணை காரில் அழைத்துச் சென்று கொன்றதுடன், சடலத்தை அடையாளம் காண முடியாதவாறு தலை துண்டித்து, ஆடைகளையும் அகற்றி பஹதூர்கரில் வீசியுள்ளார். தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் குற்றவாளியை அடையாளம் கண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் (SIT) ஃபர்கானைக் கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம், பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடைகள் உள்ளிட்ட கூடுதல் ஆதாரங்களையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.