வேதாரண்யம் பகுதியில் அதிமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராகவும் விளங்கிய PKV பிரபு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வெங்கடாசலத்தின் பேரனான இவர், அதிமுக (ஓபிஎஸ் அணி) சார்பில் மாநில அமைப்புச் செயலாளர் போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தவர். ஏற்கனவே மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் போன்ற மூத்த நிர்வாகிகள் அணி மாறிவிட்ட நிலையில், டெல்டா மாவட்டங்களில் தனக்கிருந்த பலமான தூண்களில் ஒருவரான பிரபுவின் இந்த திடீர் வெளியேற்றம், அரசியல் ரீதியாக ஓ. பன்னீர்செல்வத்திற்குப் பெரும் பின்னடைவாகவும் அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.
