தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளிலிருந்தும் நிர்வாகிகள் மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், அரியலூர் மாவட்ட முகமுமான கவிதா ஜி. ராஜேந்திரன், அக்கட்சியிலிருந்து விலகி இன்று நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தன்னை இணைத்துக் கொண்டார்.
அதிமுகவில் அரியலூர் மாவட்டச் செயலாளர், மாநிலக் கூட்டுறவு வங்கித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் கவிதா ஜி. ராஜேந்திரன்.’
இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவருக்கு பொன்னாடை போர்த்தி அக்கட்சியின் தலைவர் விஜய் உற்சாகமாக வரவேற்றார்.
உடன் கட்சிப் பணிகளிலும், தேர்தல் பணிகளிலும் முழு மூச்சாகக் கவனம் செலுத்துமாறு அவருக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார். செல்வாக்கு மிக்க மாவட்ட அளவிலான ஒரு தலைவர் தவெக-வில் இணைந்திருப்பது அரியலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
