தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்புகள் கூடிக்கொண்டே போகும் வேளையில், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மாபெரும் சுவாரசிய திருப்பம் சபாநாயகர் முன்னிலையில் அரங்கேறியுள்ளது. கடந்த சில நாட்களாகவே அதிமுகவுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் ஒன்றாக இணைந்து சபாநாயகரை நேரில் சந்தித்துள்ளனர்.

இந்த திடீர் சந்திப்பின் போது, இரு தரப்பும் சபாநாயகரிடம் தனித்தனியாக கொடுத்திருந்த கடிதங்களை அதிரடியாக திரும்பப் பெற்றுக்கொண்டு ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திற்கும் மரண ஷாக் கொடுத்துள்ளனர். ​இந்த அதிரடி மூவ்-ன் உச்சக்கட்டமாக, தன்னை கொறடாவாக அங்கீகரிக்கக் கோரி சபாநாயகரிடம் மனு அளித்திருந்த விஜயபாஸ்கர், அந்த மனுவை எவ்வித நிபந்தனையுமின்றி திடீரென வாபஸ் பெற்றுள்ளார்.

“நாங்கள் அனைவரும் எப்போதுமே ஒரே அணியாகத்தான் இருக்கிறோம்” என சபாநாயகரிடம் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள செய்தி, அதிமுகவை உடைக்கக் காத்திருந்த மாற்று முகாம்களுக்கு பலத்த அடியாக விழுந்துள்ளது. ஈபிஎஸ் மற்றும் வேலுமணி தரப்பின் இந்த திடீர் இணக்கமும், “ஒரே அணி” என்ற ஒற்றை முழக்கமும் தமிழக அரசியல் அரங்கில் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்த மரண பயத்தை கிளப்பியுள்ளது.