தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்தே அரசியல் களம் தினமொரு சர்ச்சைகளால் சூடேறி வரும் நிலையில், தற்போது அதிமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் விடுத்துள்ள அறிக்கை ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. தற்போதைய தவெக அரசு, முழுமையாக மிஷனரிகளின் தாக்கத்தில் இயங்கி வருவதாக அவர் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழக மக்கள் அனைவரும் ஒரு ‘மிஷனரி’ அரசிடம் சிக்கிக்கொண்டு தவித்து வருவதாகக் கூறியுள்ள காயத்ரி ரகுராமின் இந்த அதிரடி பேச்சு, சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.​மேலும், தவெக-வின் பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகளின் பட்டியலை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்துள்ளார் காயத்ரி ரகுராம்.

“ஜோசப் விஜய் ஒரு கிறிஸ்தவர், ஜான் ஆரோக்கியசாமி ஒரு மிஷனரி, காங்கிரஸ் மற்றும் வன்னியரசு ஆகியோர் மிஷனரிகள், கம்யூனிஸ்டுகள் செமி மிஷனரிகள், அதுமட்டுமன்றி தவெக-வின் சட்ட ஆலோசகர்கள் கூட கிறிஸ்தவர்கள் தான்” என அடுக்கடுக்கான பெயர்களைக் குறிப்பிட்டு அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

தவெக-வின் ஒட்டுமொத்த இயக்கமும், அதன் பின்னணியும் மிஷனரிகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்ற கருத்து தமிழ்நாட்டு மக்களிடையே பரவலாக எழுந்துள்ளதாக காயத்ரி ரகுராம் கொளுத்திப் போட்டுள்ள இந்த ‘மிஷனரி’ வெடிகுண்டு, தவெக வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.