தமிழக அரசியல் களத்தையே ஒட்டுமொத்தமாக உலுக்கும் வகையில், அதிமுக-வைச் சேர்ந்த முக்கிய எம்.எல்.ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்தியபாமா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். எந்தவித முன்அறிவிப்பும் இன்றி வெளியான இந்தத் திடீர் ராஜினாமா அறிவிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளையும், பரபரப்பான பேசுபொருளையும் உருவாக்கியுள்ளது.

​அதிமுக உட்கட்சிக்குள் கடந்த சில நாட்களாகவே நீறுபூத்த நெருப்பாக நிலவி வரும் கடுமையான கருத்து வேறுபாடுகள் மற்றும் இவர்களின் எதிர்கால அரசியல் நகர்வுகள் காரணமாகவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்து 3 எம்.எல்.ஏக்கள் பதவியை தூக்கி எறிந்துள்ள சம்பவம், அதிமுக தலைமைக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியதோடு, தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தைத் தொடங்கியுள்ளது