அதிமுக-வின் சட்டப்பேரவை கொறடாவாக எஸ்.பி.வேலுமணியை அங்கீகரிக்கக் கோரி சி.வி.சண்முகம் (CVS) ஆதரவு எம்.எல்.ஏக்கள் கொடுத்த மனு குறித்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மாஜி அமைச்சர்கள் உள்ளிட்ட சி.வி.சண்முகம் தரப்பு எம்.எல்.ஏக்கள் தன்னை நேரில் சந்தித்து விடுத்த கோரிக்கைகள் மற்றும் அளித்த மனுக்கள் தற்போது தீவிர ஆய்வில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

​இந்த விவகாரத்தில் சஸ்பென்ஸ் வைக்க விரும்பாத சபாநாயகர், “அதிமுக கொறடா விவகாரத்தில் சி.வி.சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகள் மீதான இறுதி முடிவை சட்டமன்றத்திலேயே அதிகாரப்பூர்வமாக வெளியிடுவேன்” என்று அதிரடியாகக் கூறியுள்ளார். சபாநாயகரின் இந்த அதிரடி அறிவிப்பால், சட்டமன்றக் கூட்டத்தொடரில் அதிமுக கொறடா விவகாரம் மிகப்பெரிய புயலைக் கிளப்பும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன