தமிழகத்தில் அதிமுகவும் பாஜகவும் வெளிப்படையான கூட்டணியாக வந்தாலும் மறைமுக கூட்டணியாக வந்தாலும் அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் காணொளி மூலமாக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய அவர், பாஜகவின் துரோகத்தையும் மக்கள் வினோத நடவடிக்கைகளையும் பாஜகவின் கைப்பாயாக அத்தனை துரோகத்திற்கும் அதிமுக துணை இருந்ததையும் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். இரண்டு கட்சிகளும் வெளிப்படையாக கூட்டணியாக வந்தாலும் சரி மறைமுக கூட்டணியாக வந்தாலும் சரி அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.