தமிழக வெற்றிக் கழகம் இதுவரை நடத்திய கூட்டங்களில் பந்தல், நாற்காலிகள் அல்லது உணவு ஏற்பாடுகளைப் பிரம்மாண்டமாகச் செய்வதைத் தவிர்த்து வந்த நிலையில், வேலூர் அகரம்சேரி கூட்டத்தில் அந்த வழக்கத்தை அடியோடு மாற்றியுள்ளது.

திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக பாணியில், தொண்டர்களுக்காகப் பிரம்மாண்ட பந்தல், இருக்கை வசதிகள், தடபுடல் உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் என சகல வசதிகளையும் தவெக தலைமை இம்முறை செய்துள்ளது. குறிப்பாக, வெயிலின் தாக்கத்தைக் குறைக்க மினி மருத்துவமனை வசதி மற்றும் நவீன ஏற்பாடுகளுடன் கூடிய உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கட்சியின் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் நோக்கில், பாரம்பரிய அரசியல் கட்சிகளின் பாணியைத் தவெக கையிலெடுத்திருப்பது 2026 தேர்தலுக்கான பலப்பரீட்சையாகவே பார்க்கப்படுகிறது.