அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அண்மையில் அளித்திருக்கும் பிரத்யேக பேட்டியில் எதிர்வரும் தேர்தலையொட்டி உருவாகக்கூடிய கூட்டணிகள் குறித்து முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். “நாம் தமிழர் கட்சி, , தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளதா?” என்ற கேள்விக்கு நேரடியாக மறுப்பளிக்கவில்லை.
அதற்கு பதிலாக, “நாங்கள் ஒத்த கருத்துடைய கட்சிகளை மட்டுமே கூட்டணிக்குள் அழைக்கிறோம். யார் என்ன அடிப்படையில் முடிவு எடுக்கிறார்கள் என்பதை காலம் தீர்மானிக்கும். காலம் கணித்து நன்மை நடக்கும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதே பேட்டியில், நாம் தமிழர் கட்சி பாஜக உடனிருக்கும் கட்சி என்று அவர்கள் கூறுவது அவர்களது கருத்தாக இருக்கலாம் என்றும், ஒரே நோக்கத்தோடு செயல்படும் கட்சிகள் ஒன்றிணைந்தால் வலிமையான மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் EPS வலியுறுத்தினார். திராவிட அரசியலை அகற்றி, மக்களால் உருவாக்கப்படும் நம்பகமான மாற்றத்தையே நோக்கமாகக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறினார். அதில் இணைவதே அனைத்துக் கட்சிகளின் பொதுவான நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் விளக்கியுள்ளார்.
இந்த பேட்டியின் முக்கியத்துவம் என்னவென்றால், EPS எந்தக் கட்சியையும் நேரடியாக மறுக்கவில்லை என்பது. ஒத்த கருத்து கொண்ட எந்தக் கட்சியும் அணியில் இணையலாம் என்ற வகையில் அவர் கையெழுத்திடவில்லை என்றாலும் நுழை வாயில்களை திறந்தவையாக வைத்துள்ளார். என்பது தெரியவருகிறது.
குறிப்பாக, “நான் இறைவனை நம்புகிறவன்… எல்லாம் நடக்கலாம்” என்ற எதிர்காலத்தில் புதிய கூட்டணிகளும், மாற்றமான அரசியல் அசைவுகளும் நிகழ வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான நேரடி சுட்டிகாட்டினார் . EPS–வின் இந்த மென்மையான ஆனால் முக்கியமான பதில், வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் எவ்வாறு வடிவமைக்கப்போகிறது என்பதைப் பற்றிய சிந்தனையை தூண்டும் விதமாக உள்ளது.
