தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்தும் பணிகளில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, சென்னையில் நேற்று ஊராளிக் கவுண்டர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் NV நாகராஜ், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுக கூட்டணிக்குத் தனது முழுமையான ஆதரவை வழங்கினார். ஏற்கனவே தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக உறுதியளித்துள்ள நிலையில், சிறிய மற்றும் சமூக அமைப்புகளை ஒருங்கிணைப்பதில் அதிமுக தலைமை மும்முரம் காட்டி வருகிறது.
வரும் 23-ஆம் தேதிக்குள் கூட்டணிக் கட்சிகளின் பட்டியலை இறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள அதிமுக, வரும் தேர்தலை வலுவானதொரு ‘மெகா கூட்டணி’யுடன் சந்திக்கத் தயாராகி வருகிறது.
