அரியலூர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் கவிதா ராஜேந்திரன் சமீபத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் த.வெ.க-வில் இணைவார் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

ஓபிஎஸ் தற்போது ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாமல் தவித்து வருவதாகவும், சில அரசியல் நெருக்கடிகள் காரணமாகவே அவர் இன்னும் தயக்கம் காட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உண்மையில் கடந்த ஜனவரி 1-ம் தேதியே ஓபிஎஸ் த.வெ.க-வில் இணைந்திருக்க வேண்டியது என்றும், ஆனால் சூழ்நிலைகள் அதனைத் தடுத்துவிட்டதாகவும் கவிதா ராஜேந்திரன் கூறினார்.

கட்சித் தலைவர் விஜய் ஏற்கனவே ஓபிஎஸ்ஸை அழைத்திருப்பதாகத் தெரிவித்த அவர், நிச்சயம் ஒருநாள் அவர் தளபதியோடு கைகோர்ப்பார் எனத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.