அதிமுகவை சமாதானம் செய்ய ஜி.கே வாசனை பாஜக அனுப்பவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்..
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தனர். அந்த வகையில் வரக்கூடிய 2024 நாடாளுமன்ற தேர்தலையும் ஏற்கனவே அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி கட்சிகளோடு இந்த தேர்தலையும் சந்திக்க பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்தியானது பரவலாக பேசப்பட்டது.
இதற்கிடையில் இது தொடர்பாகவும், அதிமுக கூட்டணி தொடர்பாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். பாஜக தேர்தல் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தபின் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, அதிமுகவை சமாதானம் செய்ய ஜி.கே வாசனை பாஜக அனுப்பவில்லை. அதேபோல எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுமாறு ஜி.கே. வாசனிடம் பாஜக கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல கூட்டணி தொடர்பாக இபிஎஸ் இடம் பேசும் ஜி கே வாசனை பாஜக தடுக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுகவினுடைய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், பாஜக அல்லாத கூட்டணியை ஜிகே வாசன் பேசுவார் என்றால் அதனை ஏற்போம் என தெரிவித்திருந்தார். இதே கேள்விக்கு அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். அந்த வகையில் அதிமுகவை சமாதானம் செய்ய ஜி கே வாசனை பாஜக அனுப்பவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுமாறு ஜி கே வாசனிடம் பாஜகவை கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி முடிவு என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, பாஜக – அதிமுக கூட்டணி தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
