
மக்களவைத் தேர்தலில் முன்னாள் எம்எல்ஏ, எம்.பிக்கள் விருப்ப மனு தாக்கல் செய்ய வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுச்செயலாளராக பதவியேற்ற பின் இபிஎஸ் சந்திக்க உள்ள முதல் தேர்தல் என்பதால், கணிசமான வெற்றியை பெற வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார். இதனால், தேர்தலில் பணத்தை தாராளமாக செலவழிக்கத் தயாராக உள்ள புதிய நபர்களுக்கு சீட் வழங்க அவர் வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.