அதிமுகவில் மீண்டும் ஒன்றுபடும் வாய்ப்பு குறித்த பரபரப்பான நிலை தொடர்ந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “அதிமுக ஒன்றிணைய வேண்டும்” என வலியுறுத்தி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார். இதனால், கட்சிக்குள் பல்வேறு விவாதங்கள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில், அதிமுகவின் முக்கிய தலைவர்களான ஆர்பி. உதயகுமார், செல்லூர் ராஜூ, தங்கமணி ஆகியோரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, அவர்கள் எந்த பதிலும் தெரிவிக்காமல் சென்றது கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்களின் மௌனம், அதிமுகவில் குழப்ப நிலை இன்னும் நீடிப்பதை வெளிப்படுத்துகிறது.
யார் பக்கம் நிற்பது என்பது குறித்து பல தலைவர்கள் திணறி வருவதாகவும், அடுத்த கட்டத்தில் அதிமுக அரசியலில் பெரிய மாற்றங்கள் வரக்கூடும் எனவும் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
