தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக தற்போது அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் இபிஎஸ் தலைமையில் ஒரு அணி மற்றும் எஸ்பி வேலுமணி தலைமையில் ஒரு அணி என இரண்டு பிளவாக இருக்கிறது. இதன் காரணமாக எஸ்பி வேலுமணி மற்றும் இபிஎஸ் தரப்பில் தனித்தனியாக சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் எஸ் பி வேலுமணி தரப்பினர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுத்த நிலையில் அமைச்சரவையிலும் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி அவர்கள் அனைவரையும் எடப்பாடி பழனிச்சாமி கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார். இதுவரையில் 26 மாவட்ட செயலாளர்களை அவர் நீக்கி இருந்த நிலையில் தற்போது அதாவது இன்று மேலும் இரண்டு மாவட்ட செயலாளர்களை நீக்கியுள்ளார்.

அதன்படி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பிகே வைரமுத்து மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சி கிருஷ்ண முரளி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். மேலும் எஸ்.பி வேலுமணி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டவேண்டும் என வலியுறுத்தி வர நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்கள் யாரும் அவர்களுக்கு ஆதரவாக கையெழுத்து போடக்கூடாது எனக் கூறியிருப்பது குறிப்பிடப்பட்டதாகும்.