சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தூய்மைப் பணியாளர் ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அதிமுகவின் ஜெ. பேரவை மாவட்ட இணைச் செயலாளரான சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் அரசியல் ரீதியாக விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், கட்சியின் கொள்கைக்கு எதிராகச் செயல்பட்ட காரணத்திற்காக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, சங்கர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக இபிஎஸ் அறிவித்துள்ளார்.
