இந்தியாவில் ஏராளமான மக்கள் தங்களுடைய எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகையை வைத்துள்ளனர். வங்கிகளை பொறுத்து பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குகின்றது. அதன்படி பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு சிறந்த வட்டியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி தற்போது வழங்குகிறது.

வழக்கமான நிலையான வைப்புத் தொகையின் வட்டி விகிதங்கள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை 3.50 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை மாறுபடும். SBI Wecare சிறப்பு பிச்சர் டெபாசிட் திட்டத்திற்கு வங்கி 7.50 சதவீதம் வட்டி வழங்குகின்றது. இந்த புதிய விகிதங்களின்படி ஏழு முதல் 45 நாட்கள் வரையான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு நான்கு சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 46 நாட்களில் இருந்து 179 நாட்கள் வரை 5.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது.

180 முதல் 210 நாட்கள் வரை 6.25 சதவீத வட்டி வழங்குகிறது. 211 நாட்களில் இருந்து ஒரு வருடம் வரை பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.5 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கி இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.5 சதவீத வருமானத்தையும், 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான பிக்சர் டெபாசிட் திட்டத்திற்கு 7.25 சதவீத ரிட்டனையும், ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு 5.50 சதவீத ரிட்டர்னையும் வழங்குகின்றது.

மேலும் எஸ்பிஐ அம்ரித் கலாஸ் சிறப்பு வைப்பு திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் 400 நாட்களுக்கு 7.60 சதவீதம் வட்டியை பெற முடியும். இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.