எக்ஸ் (X) வலைதளத்தில் வெளியான காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், யானை ஒன்று தனது பாகனிடம் ஒரு காலைத் தூக்கி நீட்டி, தனக்குக் காலை அமுக்கி விட வேண்டும் என்பது போல் சைகை செய்கிறது. அந்த யானையின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட பாகனும், மிகவும் வாஞ்சையுடன் அதன் காலைத் தடவி அமுக்கி விடுகிறார். ஒரு கால் முடிந்ததும் திருப்தியடையாத அந்த யானை, உடனே தனது அடுத்த காலையும் தூக்கி பாகனிடம் கொடுக்கிறது.
Pure love & bonding between Mahout & Elephant
So cute video ❤️ pic.twitter.com/6Lxgvxheji
— ExploreBharat (@ExploreBharat47) January 24, 2026
சற்றும் சலிக்காமல் அந்த நபர், யானையின் மற்றொரு காலையும் அழகாக அமுக்கி விடுகிறார். பாகனுக்கும் யானைக்கும் இடையேயான இந்த ஆழமான அன்பும், புரிதலும் பார்ப்பவர்களின் கண்களுக்குக் குளிர்ச்சியாக அமைந்துள்ளது. “அன்பால் எதையும் சாதிக்கலாம்” என்பதற்கு இந்த வீடியோவே ஒரு சாட்சி. பாகனிடம் ஒரு சிறு குழந்தையைப் போல அந்த யானை அடம்பிடிப்பதும், அவர் அதை ரசித்துச் செய்வதும் தற்போது இணையத்தை ஆட்சி செய்யும் மிக அழகான காணொளியாக மாறியுள்ளது.
