வேலூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் கூட்டத்திற்கு வருகை தந்த தலைவர் விஜய்யின் வருகை, அந்தப் பகுதியே ஒரு திருவிழாக் கோலம் பூண்டது போலக் காட்சியளித்தது. விஜய்யின் வருகையைத் தங்களது வீட்டு விசேஷம் போலக் கொண்டாடிய நிர்வாகிகள், அவருக்கு மிக வித்தியாசமான ஒரு நினைவுப் பரிசை வழங்கத் திட்டமிட்டிருந்தனர். “எங்கள் அண்ணாவுக்கு இதைக் கொடுக்க வேண்டும்” என்ற முடிவோடு, தீய சக்திகளை அழிக்கும் அடையாளமாகக் கருதப்படும் ஒரு பிரம்மாண்டமான ‘சூலாயுதத்தை’ விஜய்க்கு வழங்க அவர்கள் கூட்டத்திற்கு எடுத்து வந்தனர்.
வேலூருக்கு தலைவர் வர்றது ஒரு திருவிழா மாதிரி இருக்கு.. அண்ணாவுக்கு இத கொடுக்கணும்.. விஜய்க்கு வித்தியாச நினைவு பரிசாக வழங்க சூலாயுதத்துடன் வந்த த.வெ.க நிர்வாகிகள்.!#TVKVijay | #TVK | #TVKMeeting | #Vellore | #Gollamangalam | #தவெக | #தமிழகவெற்றிக்கழகம் | #விஜய் | #PolimerNews pic.twitter.com/IqSbsJNb7u
— Polimer News (@polimernews) February 23, 2026
கட்சிக் கூட்டத்தில் வழக்கமாக வழங்கப்படும் பொன்னாடைகள் மற்றும் பூங்கொத்துகளுக்குப் பதிலாக, இந்த முறை சூலாயுதம் வழங்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. விஜய்யைப் பார்ப்பதே ஒரு திருவிழா போல இருக்கும் நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட இந்த வீரமிக்கப் பரிசு தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. “எங்கள் தலைவன் தீய சக்திகளை அழிக்கப் புறப்பட்ட வீரன்” என்பதைக் காட்டும் விதமாகவே இந்தச் சூலாயுதத்தைப் பரிசாக வழங்கியதாக நிர்வாகிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
