அண்ணாமலை போட்டியிடவில்லை என்பது தற்போது வெளியாகியுள்ள 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் உறுதியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய அவர், இம்முறை அதிமுக கூட்டணியில் பாஜக களம் காணும் நிலையில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்னாள் மாநிலத் தலைவரான அவரது பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை மற்றும் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில், இந்தப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. அண்ணாமலை தேர்தல் களத்தில் நேரடியாகப் போட்டியிடாமல் தவிர்ப்பது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், கட்சியின் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், நட்சத்திர வேட்பாளரான அவரது பெயர் விடுபட்டிருப்பது தேர்தல் களத்தின் அனலை மேலும் அதிகரித்துள்ளது.
