அமமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த சோளிங்கர் முன்னாள் எம்.எல்.ஏ பார்த்திபன், அக்கட்சியிலிருந்து விலகி திடீரென திமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் இணைந்த கையோடு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது அடுக்கடுக்கான புகார்களை அவர் அடுக்கியுள்ளார். குறிப்பாக, கட்சி நிர்வாகிகளுடன் எவ்வித ஆலோசனையையும் டிடிவி தினகரன் மேற்கொள்வதில்லை என்றும், தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

​இவை அனைத்தையும் விட முக்கியமாக, “தமிழக வெற்றிக் கழகத்துடன் டிடிவி தினகரன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது எனக்குத் தெரியும்” என பார்த்திபன் வெளிப்படையாகப் போட்டு உடைத்துள்ளதுதான் இப்போது ஹாட் டாபிக். முன்னதாக, விஜய் தரப்புடன் தாங்கள் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என டிடிவி தினகரன் திட்டவட்டமாக மறுத்திருந்தார். தற்போது பார்த்திபனின் இந்த ‘வெடிகுண்டு’ போன்ற வாக்குமூலம், அமமுக மற்றும் தவெக கூட்டணி குறித்த புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.