திருச்சியில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடத்துவதற்காக பள்ளிக்கு விடுமுறை வழங்கப்பட்டதைக் கண்டித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “மாவட்ட கல்வி அலுவலர், CEO-விடம் ஆலோசனை இல்லாமல் பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டார் என்பது தவறான செயலாகும். பள்ளி மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் அரசியல் நிகழ்ச்சி நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்று இனி நிகழக்கூடாது என்பதில் நான் உறுதி அளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நூற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை அளித்து, நேற்றைய தினம், திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றிருக்கிறது. திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு,… pic.twitter.com/81HgAmAqP1
— K.Annamalai (@annamalai_k) September 10, 2025
“>
