தமிழ்நாட்டின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் ஊழலுக்கு எதிரான நடைப்பயணத்தை இன்று ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கியுள்ளார். இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அண்ணாமலை நடைபயணத்தால் அவருக்கு கால் வலி தான் வரும். வேறு எந்த பாதிப்பும் வராது. அண்ணாமலை நடைபயணத்தால் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த நடை பயணத்தை தொடங்கி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது.