மத்தியப்பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில், பேய் பிடித்திருப்பதாகக் கூறி அண்ணன் மனைவியிடம் கொடூரமான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாந்திரீக வேலைகள் செய்வதாகக் கூறி அந்த நபர், குடும்பத்தாரை பயமுறுத்தி, விசேஷ பூஜை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்காக மது, முட்டை மற்றும் தேங்காய் போன்ற பொருட்களை வரவழைத்த அவர், முதலில் தனது சகோதரரை அந்த அறையை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தியுள்ளார். தனது அண்ணன் மனைவியை மட்டும் அறைக்குள் வரவழைத்த அந்த நபர், பேய் பிடித்திருப்பதை அகற்றுவதாகக் கூறி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நம்பிக்கையைப் பயன்படுத்தி குடும்ப உறுப்பினரே இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
