சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டி பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(47). இவர் கூலி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதியினருக்கு ஆகாஷ்(23) என்ற மகன் உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயந்தி கணவரை விட்டு பிரிந்து 4 கடந்த ஆண்டுகளாக சேலத்தில் தனியாக வசித்து வருகிறார்.

இதனால் பழனிசாமி ஜெயலட்சுமி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 15-ஆம் தேதி ஆகாஷ் தனது தந்தை பழனிச்சாமி, சித்தி ஜெயலட்சுமி ஆகிய இருவரையும் தலையை துண்டித்து கொலை செய்தார். பின்னர் மூன்று சாக்கு முட்டைகளில் அவர்களது உடல் பாகங்களை கட்டி ஏரியில் வீசினார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆகாஷை பிடித்து விசாரித்த போது அவர் கூறியதாவது, சமீப காலமாக எனது தந்தை பழனிச்சாமி சித்தி மகளிடம் தவறாக நடந்து கொண்டார். இதுகுறித்து தங்கை ஏற்கனவே என்னிடம் கூறியிருந்தார். கடந்த 15-ஆம் தேதி இரவு மீண்டும் எனது தந்தை தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற போது நான் பார்த்து கோபத்தில் அவரை கீழே தள்ளி விட்டேன். பின்னர் ஜெயலட்சுமி என்னிடம் ஏன் அவரை அடிக்கிறாய் எனக் கூறி என்னை அடிக்க பாய்ந்தார்.

இதனால் கோபத்தில் தந்தையையும், சித்தியையும் கீழே தள்ளி இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டி கொலை செய்தேன். பின்னர் அவர்களது உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி தங்கையுடன் சேர்ந்து சாக்கு பைகளில் போட்டு கட்டி ஏரியில் வீசினேன். பின்னர் அக்கம் பக்கத்தினர் தந்தை மற்றும் சித்தி குறித்து கேட்டபோது அவர்கள் வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டதாக கூறினேன். ஆனால் போலீஸ்சாரின் விசாரணை வளையத்தில் சிக்கிக்கொண்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.