மதுரை அருகே பாரபத்தியில் நடைபெற்று முடிந்த தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்குப் பின், கட்சித் தலைவர் விஜய் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “நம் மீது வீசப்படும் விமர்சனங்களில் நல்லவற்றை மட்டும் நமதாக்கி உரமேற்றுவோம். அல்லவை அனைத்தையும் புறந்தள்ளி புன்னகைப்போம்” எனக் கூறியுள்ள அவர், எதிர்ப்பு குரல்களை எதிர்மறையாக இல்லாமல் கட்டாய வளர்ச்சிக்கான தூண்டுதலாகவே பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் ஆதரவை மனதில் நிறுத்தி, “மக்களுடன் தோளோடு தோள் சேர்ந்து தொடர்ந்து பயணிப்போம்” என உறுதி கூறியுள்ள விஜய், 1967 மற்றும் 1977-ஆம் ஆண்டு நிகழ்ந்த மாற்றங்களை போலவே, வருகிற 2026 சட்டமன்ற தேர்தலிலும் தமிழ்நாட்டு மக்கள், தமிழக வெற்றிக்கழகத்திற்கு பெரும் வெற்றியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார். இது, மாநாட்டின் வெற்றியை தொடர்ந்து கட்சித் தலைமையின் உற்சாக மனநிலையை வெளிப்படுத்தும் முக்கிய அறிக்கையாக பார்க்கப்படுகிறது.
— TVK Vijay (@TVKVijayHQ) August 23, 2025
“>
