தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இவர் ஹீரோயின், நெகட்டிவ் ரோல், குணச்சித்திர வேடம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து  அசத்துவார். இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். இந்நிலையில் நடிகை வரலட்சுமி சமீபத்திய பேட்டியில் தனக்கும் சினிமா துறையில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்ததாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது ஹீரோ மற்றும் இயக்குனர் கூட என்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்வார்கள்.

ஆனால் நான் அப்படிப்பட்ட வாய்ப்புகள் வேண்டாம் என்று அந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து விடுவேன். இரவு நிம்மதியாக உறங்க வேண்டும். மனதில் எந்த ஒரு குற்ற உணர்வும் இருக்கக் கூடாது. பட வாய்ப்புக்காக இது போன்ற தவறான செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கு சினிமா துறையில் அட்ஜஸ்மெண்ட் பிரச்சினை நடந்துள்ளதாக வெளிவந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.