தனது தாய் தன்னை பாலியல் அடிமையாக்கி பல ஆண்டுகளாக சித்திரவதை செய்ததாக 25 வயதான மகன் தெரிவித்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வடகிழக்கு ஹூஸ்டனில் இருந்து காணாமல் போன ரூடி ஃபரியாஸ் என்றஇளைஞர் , தனது சொந்த தாய் மீது பாலியல் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸில் 2015ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி தனது செல்ல நாயுடன் நடந்து சென்றபோது இளைஞர் காணாமல் போனார். ஹூஸ்டனில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் காணாமல் போனான். இளைஞர் காணாமல் போனபோது அவருக்கு வயது 17. அவரது தாயார் ஜேனி  சந்தனா, தனது மகன் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசாரால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஹூஸ்டனில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு அருகே இளைஞர் சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டார். சிறுவன் படுகாயமடைந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரைக் கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முதற்கட்ட விசாரணைக்கு பின் போலீசார் நடத்திய விசாரணையில், 8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனது ரூடி என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

ஒரு வாரத்திற்கு பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த 8 ஆண்டுகளாக தனது தாய் ரகசியமாக வைத்து பாலியல் சித்ரவதை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். அவரது தாயார் ஜேனி சந்தனா பொய் சொல்கிறார் என்றும், அவர் தன்னை தலைமறைவாக வைத்திருப்பதாகவும் மகன் போலீசாரிடம் கூறினார். அவரது அப்பா போல படுக்கையறையில் அருகே படுத்து கொள்ள வேண்டும் என்று அந்த இளைஞரின் அம்மா விரும்பியுள்ளார். மேலும், தகவலை வெளியிடக் கூடாது என மிரட்டியதாகவும் ரூடி தெரிவித்தார்.

ரூடியை காணவில்லை என புகார் அளித்த தாய் ஏமாற்றியதாக போலீசார் தெரிவித்தனர். சிறுவனின் வெளிப்பாடு குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இருப்பினும், ரூடியின் தாயார் அவரை பாலியல் அடிமையாக்கி பல ஆண்டுகளாக சித்திரவதை செய்ததாக ரூடியின் வெளிப்பாட்டை போலீசார் உறுதிப்படுத்தவில்லை. குறித்த இளைஞன் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், காணாமல் போன போது மருந்து உட்கொண்டிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர் காணாமல் போன அன்று மருந்து சாப்பிடவில்லை என்று உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கு நேர்மாறாக, வியாழன் அன்று செய்தியாளர் சந்திப்பின் போது, ​​ஹூஸ்டன் பொலிசார் ஃபரியாஸ் பாலியல் வன்கொடுமை அல்லது போதைப்பொருள் பற்றி எந்த புகாரும் அளிக்கவில்லை என்று கூறினார். ஃபரியாஸ் பாதுகாப்பாக இருப்பதாகவும் தற்போது விருப்பப்படி அவரது தாயுடன் இருப்பதாகவும்  கூறினர்.

தனது தாய் சிக்கலில் இருப்பதையோ அல்லது சிறைக்குச் செல்வதையோ தான் விரும்பவில்லை என்று ஃபரியாஸ் பலமுறை கெஞ்சுவதாக கூறப்படுகிறது. ஆனாலும் பொய் புகார் அளித்துள்ளதால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கக்கூடும்..