ட்விட்டர் செயலி எலான் மஸ்கின் கட்டுப்பாட்டிற்கு சென்றதிலிருந்து ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ப்ளூ டிக் பெற கட்டணம் என்பதில் தொடங்கி ஒரு நாள் இத்தனை பதிவுகளைத் தான் பார்க்க முடியும் என்பது வரை போடப்பட்ட கட்டுப்பாடுகள் பயனர்களை அதிருப்தி அடையச் செய்தது. இதனிடையே மெட்டா நிறுவனம் twitter க்கு மாற்றாக புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக கூறி நேற்று த்ரட்ஸ்-ஐ வெளியிட்டது.

இதனிடையே மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில்கேட்ஸ் த்ரட்ஸ் வெளியான சில நிமிடங்களிலேயே செயலியில் இணைந்து “த்ரட்ஸ் செயலியில் இணைந்ததில் மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார். அதற்கு மார்க் ஜூக்கர்பர்க் செயலியில் இணைந்தது நல்ல முயற்சி என பதில் அளித்துள்ளார். த்ரட்ஸ் செயலி வெளியான 7 மணி நேரத்திலேயே ஒரு கோடி பயனர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.