ட்விட்டர் செயலி எலான் மஸ்கின் கட்டுப்பாட்டிற்கு சென்றதிலிருந்து ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ப்ளூ டிக் பெற கட்டணம் என்பதில் தொடங்கி ஒரு நாள் இத்தனை பதிவுகளைத் தான் பார்க்க முடியும் என்பது வரை போடப்பட்ட கட்டுப்பாடுகள் பயனர்களை அதிருப்தி அடையச்செய்தது. இதனிடையே மெட்டா நிறுவனம் twitter க்கு மாற்றாக புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக கூறி நேற்று த்ரட்ஸ்-ஐ வெளியிட்டது.

இந்த செயலியில் இணைந்த பயனர்கள் சிலர் த்ரட்ஸ் ட்விட்டரை போன்றே இருப்பதாகவும் இது  ட்விட்டரை காப்பி பேஸ்ட் செய்திருப்பதாகவும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் வழக்கறிஞர் அலெக்ஸ் மெட்டா நிறுவனத்தின் மீது வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை உறுதிப்படுத்திய எலான் மஸ்க் “போட்டியை ஏற்றுக் கொள்ளலாம் ஏமாற்றுவதை ஏற்க முடியாது” என ட்விட் செய்துள்ளார்