உத்தர பிரதேஷ் மாநிலம் மொரதாபாத் நெடுஞ்சாலையில் ஒரு ஸ்கூட்டரில் 6 பேர் பயணித்துள்ளனர். இதனை அவ்வழியாக காரில் சென்ற நபர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளி வைரலான நிலையில் உத்தர் பிரதேச காவல்துறையினர் எக்ஸ் வலைதள பக்கத்தில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.