
சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள், பறவைகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் தினம்தோறும் அதிக அளவில் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது.
பொதுவாகவே மயில்கள் பல வண்ணங்களுடன் துடிப்பான மற்றும் முழு தோகைகளை விரிப்பதை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு மயில் மின்சார கேபிள் போன்ற ஒரு இடத்தில் அமர்ந்து அதன் பிறகு பறக்க ஆரம்பிக்கிறது. அது வானத்தில் அற்புதமான தொகையை விரித்து பறப்பது வெவ்வேறு கோணங்களில் படம் பிடிக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Have you ever seen a peacock fly? pic.twitter.com/9qe763rkaH
— CCTV IDIOTS (@cctvidiots) July 31, 2023