உலகம் முழுவதும் பெரும்பாலான உணவு பிரியர்களின் முதல் தேர்வு இறைச்சியாகத்தான் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட விலங்குகளின் இறைச்சியை அதிக அளவில் சாப்பிடுகின்றார்கள். அந்தவகையில் ஆண்டு முழுவதும் மனிதர்கள் சாப்பிடும் விலங்குகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதன்படி, மனிதர்கள் சாப்பிடுவதற்காக ஆண்டுக்கு 75 பில்லியன் (7500 கோடி) கோழிகள் இறைச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. அடுத்தபடியாக 14 பில்லியன் அளவிற்கு மத்தி மீன்கள், இறால் 3 பில்லியன், வாத்து 2.9 பில்லியன், பன்றிகள் 1.5 பில்லியன் அளவிற்கு மனிதர்கள் சாப்பிடுகிறார்கள்.