தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய் அவர்களின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பிரபல ஜோதிடர் ராதன் பண்டிட் பேட்டி வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. அதில் பேசிய அவர், “இன்னும் 50 வருடத்திற்கு விஜய் அவர்கள் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பார்; அவரைப் பொறுத்தவரை முதலமைச்சர் என்பது மிகச் சாதாரணமான ஒரு பதவி. இந்தியாவில் இருக்கும் 30 மாநிலங்களில் ஒரு மாநிலத்திற்கு முதலமைச்சராக இருப்பது என்பது அவருடைய திறமைக்கு மிகக் குறைவு” என்று ஓப்பனாகப் பேசியுள்ளார்.
விஜய்யின் அடுத்த டார்கெட் டெல்லி லெவல் அரசியல் என்றும், அதைத் தாண்டி அவர் உலக அளவிலான மிக உயரிய தலைவராக உருவெடுப்பார் என்றும் அவர் கணித்துள்ளார். “நாளைக்கு அமெரிக்க அதிபருக்கும் ரஷ்ய அதிபருக்கும் இடையே ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் கூட, அதைத் தீர்த்து வைக்க நம் புதிய முதல்வர் விஜய் அவர்கள் பேசுவார்; ஒரு உண்மையான தலைவன் என்பவன் தானாகக் கூடும் கூட்டத்தை நல்லா வச்சுக்கணும்னு நினைப்பான். அப்படி விஜய்க்குத் தானாகக் கூடும் கூட்டத்தை அவர் நல்லா வச்சுப்பார்” என்று ஜோதிடர் பேசியுள்ள இந்த மாஸ் வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் தவெக தொண்டர்களால் பயங்கரமாகக் கொண்டாடப்பட்டு வைரலாகி வருகிறது.
