உலக அரசியலில் அதிரடிக்குப் பெயர் போன அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இப்போது கியூபா நாட்டின் மீது தனது பார்வையைத் திருப்பியிருப்பது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே வெனிசுலா மீது அதிரடித் தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்து அமெரிக்காவிற்குத் தூக்கிச் சென்ற ட்ரம்ப், இப்போது “அடுத்த டார்கெட் கியூபா தான்” என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 10 முறை கியூபாவிற்கு மிரட்டல் விடுத்துள்ள ட்ரம்ப், கியூபாவை அமெரிக்காவிற்குப் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கூறி அதற்கான அவசர உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார். இதனால் ஈரான் மற்றும் வெனிசுலாவைத் தொடர்ந்து, கியூபா மீதும் அமெரிக்கா போர் தொடுக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்குப் பின்னால் 67 காலப் பகை ஒளிந்து கிடக்கிறது. 1959-ல் பிடல் காஸ்ட்ரோ புரட்சி செய்து கியூபாவின் ஆட்சியைக் கைப்பற்றியது முதல், அந்த நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏழாம் பொருத்தம் தான்.

இப்போது வெனிசுலா மீதான தாக்குதலால் கியூபாவிற்கு வந்து கொண்டிருந்த எண்ணெய் விநியோகம் முழுமையாகப் பாதிக்கப்பட்டு, அந்த நாடு கடும் பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது.

மின்சாரம் இன்றி பல கோடி மக்கள் இருளில் தவிக்கும் நிலையில், கியூபாவின் இறையாண்மையைப் பாதுகாக்கத் தயார் என்று அந்த நாட்டு அதிபர் மிகேல் டயஸ்-கேனல் பதிலடி கொடுத்துள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த ஆக்ரோஷமான நகர்வுகள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது மற்றொரு பெரிய ராணுவ மோதலாக வெடிக்குமோ என்ற அச்சத்தில் உலக நாடுகள் உறைந்து போயுள்ளன.