கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது காங்கிரஸ் கட்சி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டங்கள் அமலுக்கு வரும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகளில் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதற்கு ஐந்து பேர் கொண்ட வல்லுநர் குழு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கன்னட மொழி பாடத்திட்டத்தில் அஞ்சப்பா, ஹெச் எஸ் சத்யநாராயணன், மஞ்சண்ணா ஆகிய ஆசிரியர்களும், சமூக அறிவியல் பாடத் திட்டத்திற்கு ஓய்வு பெற்ற பேராசிரியர் மற்றும் ஓய்வு பெற்ற வரலாற்றை விரிவுரையாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தவிர்த்து மீதமுள்ள பாடத்திட்டத்திற்கும் உதவி பெற்ற பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் புதிய பாடத்திட்டங்களை தயார்படுத்த வல்லுனர்களுக்கு மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.