இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இதற்கான திட்டங்கள் ரோஸ்கர் மேளா என்ற பெயரில் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் நாடு முழுவதும் 46 இடங்களில் இந்த திட்டம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இதில் புதிதாக 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கான பணியமான கடிதங்களை பிரதமர் வழங்கினார்.

பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் நாடு புதிய உச்சத்தை தொட்டு வருவதாகவும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வேகமாகவும் வெளிப்படை தன்மையுடனும் கிடைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . அதேசமயம் பிரதமரின் இலக்கான 2023 ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டமிட்டபடி வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.