பீகார் மாநிலத்தில் உள்ள ஆராரியா பகுதியில் பக்ரா என்ற ஆறு உள்ளது. இந்த ஆற்றின் மீது புதிதாக பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்த நிலையில் திறப்பு விழாவுக்கு தயாரானது. ஆனால் திறப்பு விழா நடைபெறுவதற்கு முன்பாகவே திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தரமற்ற பொருட்களால் கட்டப்பட்டதால் தான் பாலம் இடிந்து விழுந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் நடந்து முடிந்த ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. அதாவது அங்கு படேதா-கரோலி ஆகிய கிராமங்கள் அருகருகே உள்ளது. இந்த இரு கிராமங்களையும் இணைக்கும் விதத்தில் சிறிய பாலம் ஒன்று கட்டப்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த வருடம் ரூ.1717 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் ஆற்றல் இடிந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.