இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பாம்பைக் கண்டால் பயப்படும் பலருக்கு மத்தியில், ஒரு சிறுமி தனது தந்தையிடம் இருந்து பாம்பை விரட்டுவது எப்படி என்று கற்றுக்கொண்டு, தைரியமாக ஒரு பாம்பை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். காணொளியில், வீட்டில் பதுங்கியிருந்த பாம்பை சிறுமி கண்டு, தனது தந்தையிடம் தெரிவிக்கிறார். தந்தை உடனடியாக அவளுக்கு பயமின்றி பாம்பை விரட்டுவதற்கு தேவையான வழிமுறைகளை கற்றுக்கொடுக்கிறார்.
சிறுமி, தந்தையின் அறிவுரையைப் பின்பற்றி, வீடு துடைக்கும் மாப்பைப் பயன்படுத்தி பாம்பை மெதுவாக விரட்டுகிறார். பயமின்றி, அவர் பாம்பை வீட்டை விட்டு வெளியே அனுப்பி வெற்றி பெறுகிறார். இந்த காணொளியைப் பார்த்த இணையவாசிகள், சிறுமியின் துணிச்சலையும், அவளுக்கு வழிகாட்டிய தந்தையின் அணுகுமுறையையும் பெரிதும் பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவம், சிறு வயதிலேயே தைரியத்தையும் பொறுப்பையும் கற்பிக்கும் ஒரு அழகான உதாரணமாக அமைந்துள்ளது.
