திருவண்ணாமலையில் இன்று நடைபெற்ற பூத் முகவர்கள் மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பூத் முகவர்கள் இன்னும் எட்டு மாதங்களுக்கு சரிவர பணி செய்ய வேண்டும் எனவும் அப்போதுதான் திமுக அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியும் எனவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர் எடப்பாடி பழனிசாமியையும் பாஜகவையும் விமர்சித்தார். அதாவது எடப்பாடி பழனிச்சாமையின் சுற்றுப்பயணம் வெள்ளை வேஷ்டியில் தொடங்கி காவி வேஷ்டியில் முடிவடைந்து விட்டதாக கூறினார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி போல் அமித்ஷா வீட்டு கதவை திருட்டுத்தனமாக தட்டவில்லை. மக்களின் வீட்டு கதவுகளை தான் திமுக உரிமையோடு தட்டுகிறது.
அமித்ஷா வீட்டு கதவுகளையோ கமலாயத்தின் கதவுகளையும் தட்டாமல் மக்கள் வீட்டு கதவுகளை நாங்கள் உரிமையாக தட்டுகிறோம். எடப்பாடி பழனிச்சாமி ஓடி ஒளிந்து பாஜகவுடன் கூட்டணி வைத்த நிலையில் அதில் சுமுகமான முடிவு இல்லை என்பது தெரிகிறது.
அண்ணா பெயரில் கட்சியை வைத்துவிட்டு அதிமுகவை பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமி அடமானம் வைத்துவிட்டார். பாசிச மாடல் என்றால் பாஜக அடிமை மாடல் என்றால் அதிமுக. வருகிற சட்டமன்ற தேர்தலில் அடிமைகளையும் பாசிஸ்டுகளையும் தமிழக மக்கள் வீழ்த்துவார்கள்.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அதிமுக பாதை போட்டு கொடுக்கிறது. தேர்தல் களத்தில் திமுக முந்துவதால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பயம் வந்துவிட்டது. மேலும் எடப்பாடி பழனிசாமியின் பயணம் வெள்ளை வேட்டியில் தொடங்கி காவி வேட்டியில் முடிந்துவிட்டது என்றார்.
