
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளி ராஜா ஆகிய மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. முட்டுக்காடு ஊராட்சித் தலைவரின் கணவரை பழிவாங்கும் எண்ணத்தோடு இந்த குற்ற சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என விசிக, அதிமுக போன்ற காட்சிகள் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் நீர் தேக்க தொட்டியில் இரண்டு பேர் மலம் இருக்கும் பையுடன் அமர்ந்து பேசும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சுதர்சன் வீடியோ எடுக்கிறான் என பேசும் ஆடியோவும் பதிவாகியுள்ளது.
இதற்கிடையே சுதர்சனின் அம்மாவும், அத்தையும் பேசியதாக கூறப்படும் இரண்டு ஆடியோ வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் எவ்வளவு கேட்டாலும் ஒத்துக்காதே, அடிச்சு கேட்டாலும் ஒத்துக்கவே ஒதுக்காத என சுதர்சனின் அம்மா கூறியுள்ளார். ஏற்கனவே குற்றப் பத்திரிகை தகவல் செய்த நிலையில் இந்த வீடியோவும் ஆடியோவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.