மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தின் தல்சாண்டேவில் உள்ள ஷாம்ராவ் பாட்டீல் கல்லூரி விடுதியில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விடுதியில் சில மூத்த மாணவர்கள் அப்பாவி மாணவர்களை பெல்ட்கள், மட்டைகள், உதைகள் மற்றும் குத்துக்களால் தாக்கும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஒரு சிறுவன் அடியால் அலறி அழுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் அந்த வீடியோ வேகமாக பரவி, பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
महाराष्ट्र के कोल्हापुर जिले के तलसांडे स्थित एक हॉस्टल से बेरहमी का वीडियो सामने आया है. इस वीडियो में बच्चों को हॉस्टल के कुछ बड़े छात्रों द्वारा बेरहमी से पीटते देखा जा सकता है. मासूम बच्चों पर बड़े छात्रों की बेरहमी देखकर कोई भी सिहर उठेगा, जिसमें बच्चों को बेल्ट, बैट और… pic.twitter.com/8I8JdGApoE
— NDTV India (@ndtvindia) October 11, 2025
“>
இச்சம்பவம் குறித்து மாவட்ட சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளாகிய மூத்த மாணவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரி அவர்கள் காவல் நிலையத்தை அடைந்தனர்.
மேலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இதுபோன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதவாறு நடவடிக்கை எடுக்கவும் கல்வித்துறை அதிகாரிகளிடம் சமூக சேவையாளர்கள் மனு அளித்துள்ளனர்.
