ஒடிசா மாநிலத்தில் உள்ள லிங்கபடா கிராமத்தில் ஜோதிர் மயி ரானா என்ற 25 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவரின் வீட்டிற்கு ஒரு வாலிபர் அடிக்கடி வந்து ஜோதிர்மயியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவருடைய பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்த போதிலும் தொடர்ந்து வாலிபர் அங்கு சென்று அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதற்கிடையில் அந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த கொலையை பெண் கேட்டு வந்த வாலிபர் தான் செய்துள்ளார் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
