திருமணத் தளம் மூலமாக அறிமுகமான விஜய் ராஜ் கௌடா என்ற நபர், தன்னைப் பெரிய கோடீஸ்வரர் என்று பொய் சொல்லி, ஒரு மென்பொருள் பொறியாளரை நம்ப வைத்து ஏமாற்றியிருக்கிறார். இதில் உச்சக்கட்ட அதிர்ச்சி என்னவென்றால், தனது சொந்த மனைவியையே ‘தங்கை’ என்று அறிமுகப்படுத்தி, தந்தை மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து ஒரு நாடகத்தையே அரங்கேற்றியிருக்கிறார்கள். அமலாக்கத் துறை தனது வங்கிக் கணக்குகளை முடக்கிவிட்டதாக போலி ஆவணங்களைக் காட்டி பயமுறுத்தி, அந்தப் பெண்ணை நம்ப வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக சுமார் 1.75 கோடி ரூபாய் வரை பறித்திருக்கிறார்கள்.
பணத்தை இழந்த அந்தப் பெண் திரும்பக் கேட்டபோது, அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதோடு, விஜய் ஏற்கனவே திருமணமானவர் என்ற கசப்பான உண்மையும் தெரியவந்தது. ஆசை வார்த்தைகளை நம்பி வங்கிகளில் கடன் வாங்கியும், நண்பர்களிடம் வாங்கியும் கொடுத்த அந்தப் பெண் இப்போது ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். திருமணத் தளங்களில் வரன் தேடுபவர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை பாடம்
