கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொழுதூர் பகுதியில் கௌஷிக் என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கிறார் நேற்று கௌஷிக் பள்ளிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது ஷூவை அணிய முயன்ற போது காலில் ஏதோ கடித்தது போல உணர்வு ஏற்பட்டுள்ளது.
உடனே அலறி சத்தம் போட்டு சிறுவன் மயங்கி விழுந்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஷூவில் பார்த்தபோது ஒரு சிறிய பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தங்களது மகனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
