சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். கடந்த 22-ஆம் தேதி கணவன் மனைவி இருவரும் தனிமையில் இருந்தபோது சிலர் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்து தங்களது நண்பர்களுக்கு அனுப்பி உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட பெண் வேலை பார்க்கும் இடத்திற்கு ஒரு நபர் சென்று நான் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறேன்.

உங்கள் மீது தொடர்ந்து புகார் வருவதால் விசாரணைக்கு வரவேண்டும் என கூறிய காரில் அழைத்துச் சென்றார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அந்த நபர் தனது செல்போனில் உள்ள வீடியோவை அந்த பெண்ணிடம் காண்பித்து இது நீங்கள் தானே என கேட்டு உள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் இதனை எப்படி எடுத்தீர்கள் என கேட்டபோது இந்த வீடியோவை யாருக்கும் அனுப்பாமல் இருக்க 3 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார். பின்னர் அந்தப் பெண் அணிந்திருந்த செயினை கேட்டுள்ளார். அவை கவரிங் என கூறியவுடன் நாளை 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கணவரிடம் கூறாமல் எங்களுடன் உல்லாசமாக இருக்க வர வேண்டும்.

அப்படி இல்லை என்றால் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் கூறி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வைத்தியலிங்கம் பகுதியைச் சேர்ந்த கோகுல் சந்தோஷ்(21), முத்து பாண்டி(24) ஹரிஹரசுதன்(28), 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஹரிஹரன் சுதன் சித்தா டாக்டராக வேலை பார்ப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.