முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் உருவாகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.  இந்நிலையில்  நடிகர் அஜித் தலைமையில் செயல்பட்டு வரும் தக்ஷா குழு, இந்திய ராணுவத்திற்கு ட்ரோன் தயாரிக்கும் ஆர்டரை பெற்றுள்ளது. ஏரோநாட்டிக்ஸ் துறையில் ஆர்வம் கொண்ட அஜித் தலைமையில், சென்னை MITயை சேர்ந்த மாணவர்கள் குழு செயல்பட்டு வருகிறது.

இந்த குழு இணைந்து உருவாக்கிய ட்ரோன்கள் கொரோனா காலகட்டத்தில் பல திட்டங்களுக்கு பயன்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தக்ஷா குழு இந்திய ராணுவத்திற்கு ரூ.165 கோடி மதிப்பில் 200 ட்ரோன்களை தயாரிக்கும் ஆர்டரை தற்போது பெற்றுள்ளது. அஜித் குழுவினரின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.