தமிழில் யுனிவர்சிட்டி திரைப்படத்தில் நடித்த ஷெர்லின் சோப்ரா ஹிந்தியில் பிரபல நடிகையாக வலம் வருபவர். இவர் இணையதளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பவர். இந்நிலையில் இவர் பொது இடத்தில் வைத்து ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தபோது ஒருவர் ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்வீர்களா என்று விளையாட்டாக கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த ஷெர்லின் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியதோடு திருமணத்திற்குப் பிறகு தனது குடும்பப் பெயரை மாற்றிக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான காணொளியை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வீடியோவை காண