தமிழ் சினிமாவில் பிரம்மன் உள்ளிட்ட  ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் பிரபல நடிகர் வருண் தேஜை காதலித்து திருமணம் செய்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இவர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இவர்கள் தெலுங்கு சினிமாவில் மிஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் சேர்ந்து நடித்திருந்தனர். இந்நிலையில் நடிகை லாவண்யா மற்றும் வருண் தேஜ் தம்பதிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு இன்று குழந்தை பிறந்துள்ள நிலையில் பிரபல நடிகர் சிரஞ்சீவி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். மேலும் இதே போன்று திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.